Posts

பொங்கலாயணம்

பயணச் சீட்டு இல்லாமல் எவரும் உலகை சுற்றி வரலாம்.  உல்லாசமாய் ஆடலாம், பாடலாம். நாட்டிற்கே அரசனாகலாம். உலக அழகியையே மணக்கலாம்.  தனவான் ஏழை என்று வித்தியாசமில்லாமல் உண்டவரை கனவுலகில் இழுத்து செல்லும் பொங்கலே நீ வாழ்க.

தோசையின் ஓசை

 தோசை. நீ உருவாகும் போது எழும்பும் ஓசை ஒரு கர்நாடக இசை. உனக்கு இரும்பென்றால் காதல். கல்லை விட்டு வர மாட்டாய். மீறி பிறிக்க முற்பட்டால் கந்தலாய் உன்னை மாய்த்துக் கொள்வாய். நானும் பல முறை உன்னை கல்லில் பிய்த்து உன் காதலை கொன்றிருக்கிறேன்.   கை தேர்ந்தவர்களுக்கு மட்டும் தான் நீ வாட்டம். மற்றவர்களிடம் நீ காட்டுவது முகமாட்டம்.  காதலுக்கு எதிரி நான் ஸ்டிக் டாவா.  வா வா என்று தோசை ஆசைப்பட்டாலும் போ போ என்று அனுப்பி விடும் முற்றும் துறந்த முனிவன். ஒட்ட விட மாட்டான். தோசையே, நீ பலருடன் கூட்டு சேர்ந்து நாவிற்கு தரும் சுவை. அது தனி வகை. மசாலாவை உன்னுள் அடக்கி நாவில் குத்தாட்டம் போடுவாய்.  சட்னி சாம்பருடன் பட்னியை மறக்கடிப்பாய். அதிலும் குருமா, தோசைக்கு சரியா வருமா என்றால் உண்டு பார் சுகமா.  நீ கர்நாடகாவில் நீர் தோசை. ஆந்திராவில் பெசரட்டு. கேரளத்தில் கப்பை தோசை. ஆனால் உன் மேல் ஆசை கொண்ட தமிழனுக்கு மட்டும் தான் நீ ஏழிசை பாடும் தோசை.  குழியிலிட்ட குஷ்பு இட்லி கல்லாய் மாறுவதும் கல்லில் தேய்த்த தோசை என்றும் பொன்னிறமாய் ஜொலிப்பதும் நம் நேரத்தை பொருத்தது தான். எனி...

உறவுகள் மேம்பட....

சில உறவுகள் தருவது பாசம். சில உறவுகள் தருவது பாடம். பாசம் என்றால் பெற்றுக் கொள்வோம்.  பாடம் என்றால் கற்றுக் கொள்வோம்.  உறவுகளுக்கு பாலாமாயிருப்பது அன்னை. பாசமில்லாத உறவில் பாடத்தையும் பாசத்தையும் புரிய வைத்து ஒற்றுமையை வளர்ப்பவளே அன்னை.  சில உறவுகளில் தாய் கோவில் சிலை போல் அமைதியாய் இருப்பாள்.  இதையே தான், தாயிற் சிறந்த கோவிலுமில்லை என்றானோ? தவறுகள் எதுவாயினும் தலையில் வைத்தால், பாரம் நம்மை அழுத்திவிடும். தவறுகளை காலடியில் போட்டு படிக்கட்டாய் பாவித்தால் வாழ்வில் உயர்வு நிச்சயம். தவறு செய்பவனே மனிதன். தவறு செய்யாதவன் தெய்வம். தெய்வத்திற்கு, இவ்வுலகில் கோவிலிலோ அல்லது வீட்டின் சுவற்றிலோ தான் இடம்.  பூமியில் வாழ தவறை மன்னித்து ஒற்றுமையுடன் இருத்தல் அவசியம்.  உடல்நலத்திற்கு மனமே காரணம்.  வஞ்சமும் வன்மமும் நெஞ்சை கொன்றிடும். அன்பும் பண்பும் நெஞ்சை நெகிழ்த்திடும்.  ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு.  வினையை விதைத்து வினையை வளர்ப்பதை விட, வினையை களைந்து விவேகத்துடன் வாழ்வதே வாழ்க்கை.  உறவுகளுக்குள், ஒரு நிகழ்விற்கு பல காரணங்கள். நிகழ்வு என்பது...