உறவுகள் மேம்பட....
சில உறவுகள் தருவது பாசம்.
சில உறவுகள் தருவது பாடம்.
பாசம் என்றால் பெற்றுக் கொள்வோம்.
பாடம் என்றால் கற்றுக் கொள்வோம்.
உறவுகளுக்கு பாலாமாயிருப்பது அன்னை.
பாசமில்லாத உறவில் பாடத்தையும் பாசத்தையும் புரிய வைத்து ஒற்றுமையை வளர்ப்பவளே அன்னை.
சில உறவுகளில் தாய் கோவில் சிலை போல் அமைதியாய் இருப்பாள்.
இதையே தான், தாயிற் சிறந்த கோவிலுமில்லை என்றானோ?
தவறுகள் எதுவாயினும் தலையில் வைத்தால், பாரம் நம்மை அழுத்திவிடும்.
தவறுகளை காலடியில் போட்டு படிக்கட்டாய் பாவித்தால் வாழ்வில் உயர்வு நிச்சயம்.
தவறு செய்பவனே மனிதன்.
தவறு செய்யாதவன் தெய்வம்.
தெய்வத்திற்கு, இவ்வுலகில் கோவிலிலோ அல்லது வீட்டின் சுவற்றிலோ தான் இடம்.
பூமியில் வாழ தவறை மன்னித்து ஒற்றுமையுடன் இருத்தல் அவசியம்.
உடல்நலத்திற்கு மனமே காரணம்.
வஞ்சமும் வன்மமும் நெஞ்சை கொன்றிடும்.
அன்பும் பண்பும் நெஞ்சை நெகிழ்த்திடும்.
ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு.
வினையை விதைத்து வினையை வளர்ப்பதை விட, வினையை களைந்து விவேகத்துடன் வாழ்வதே வாழ்க்கை.
உறவுகளுக்குள், ஒரு நிகழ்விற்கு பல காரணங்கள்.
நிகழ்வு என்பது இறந்தகாலம்.
காரணங்களை ஆராய்ந்தால், நிகழ்காலம் நரகமாகும்.
இறந்த காலத்தை மறந்து, வருங்காலத்தை வசந்தகாலாமாக்குபவனே புத்திசாலி.
இறந்த கால மூட்டையை சுமந்தால், மூட்டையின் பாரத்தால் வருங்கால வாழ்க்கை கூனி குறுகிவுடும்.
மன்னித்து மறப்பவனே ஞானி.
ஞானி என்றுமே வீழ்ந்ததில்லை.
ஜகன்னாத். சே.
Comments
Post a Comment