Posts

Showing posts from November, 2023

பொங்கலாயணம்

பயணச் சீட்டு இல்லாமல் எவரும் உலகை சுற்றி வரலாம்.  உல்லாசமாய் ஆடலாம், பாடலாம். நாட்டிற்கே அரசனாகலாம். உலக அழகியையே மணக்கலாம்.  தனவான் ஏழை என்று வித்தியாசமில்லாமல் உண்டவரை கனவுலகில் இழுத்து செல்லும் பொங்கலே நீ வாழ்க.

தோசையின் ஓசை

 தோசை. நீ உருவாகும் போது எழும்பும் ஓசை ஒரு கர்நாடக இசை. உனக்கு இரும்பென்றால் காதல். கல்லை விட்டு வர மாட்டாய். மீறி பிறிக்க முற்பட்டால் கந்தலாய் உன்னை மாய்த்துக் கொள்வாய். நானும் பல முறை உன்னை கல்லில் பிய்த்து உன் காதலை கொன்றிருக்கிறேன்.   கை தேர்ந்தவர்களுக்கு மட்டும் தான் நீ வாட்டம். மற்றவர்களிடம் நீ காட்டுவது முகமாட்டம்.  காதலுக்கு எதிரி நான் ஸ்டிக் டாவா.  வா வா என்று தோசை ஆசைப்பட்டாலும் போ போ என்று அனுப்பி விடும் முற்றும் துறந்த முனிவன். ஒட்ட விட மாட்டான். தோசையே, நீ பலருடன் கூட்டு சேர்ந்து நாவிற்கு தரும் சுவை. அது தனி வகை. மசாலாவை உன்னுள் அடக்கி நாவில் குத்தாட்டம் போடுவாய்.  சட்னி சாம்பருடன் பட்னியை மறக்கடிப்பாய். அதிலும் குருமா, தோசைக்கு சரியா வருமா என்றால் உண்டு பார் சுகமா.  நீ கர்நாடகாவில் நீர் தோசை. ஆந்திராவில் பெசரட்டு. கேரளத்தில் கப்பை தோசை. ஆனால் உன் மேல் ஆசை கொண்ட தமிழனுக்கு மட்டும் தான் நீ ஏழிசை பாடும் தோசை.  குழியிலிட்ட குஷ்பு இட்லி கல்லாய் மாறுவதும் கல்லில் தேய்த்த தோசை என்றும் பொன்னிறமாய் ஜொலிப்பதும் நம் நேரத்தை பொருத்தது தான். எனி...